ஒசூரில் உள்ள டாடா நிறுவனத்தில் பணியாற்றிவரும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெண் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து ஆயிரக்கணக்கான இளம்பெண் தொழிலாளர்கள் விடுதி முன்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து ரகசிய கேமரா வைத்ததாக வடமாநில பெண் தொழிலாளியான நீலா குமாரி (23) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட விடியோவை தனது ஆண்நண்பருக்கு நீலா குமாரி அனுப்பியதாகவும், அது சமூக வலைத்தளத்தில் பரவியதும் தெரிய வந்தது.
