உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் அண்மையில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது நடைபெற்ற விருந்தில் கோழி இறைச்சித் துண்டுகள் குறைந்த அளவுக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விருந்து வகைகளைப் பரிமாறும் நபர்கள் தங்களை மோசமாக நடத்தியதாகவும் மணமகன் வீட்டார் கோபப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் இரு வீட்டாரும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபமே களேபரமானது. இதையடுத்து அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இந்த சண்டையில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
