பீகாரில் இருந்து பல வருடங்களுக்கு முன் குஜராத்திற்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் குடியேறியது.
தனது அண்ணன் தன்னை அடிக்கடி அடிப்பதால் அவர் 15 வயது தம்பி வெறுப்புடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 அன்று வீட்டில் வைத்து அண்ணனை இரும்புக் கம்பியால் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொன்றான்.
பிறகு 6 மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளான். இருவரின் உடலையும் வீட்டின் பின்புறம் புதைத்த அந்த சிறுவன் அண்ணனும் அண்ணியும் பீகாருக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லி அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துள்ளான்.
சிறுவனின் நடவடிக்கை மீது சந்தேகமடைந்த உறவினர்கள் ஜுனாகடில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
