SIR தொடர்பான கூட்டத்தில் இன்று பங்கேற்றுப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது போல தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைத்து வளர்ச்சி திட்டங்களை பாஜக கொண்டு வரும்.
திமுக கடந்த 2 ஆண்டுகளாக பொய்யான வாக்காளர்களை பதிவு செய்து, ஒரு பூத்துக்கு 20 பேராவது அதிகமாக இருக்க வேண்டும் எனச் சொல்லி ஒரு போலியான வாக்காளர் பதிவை நடத்தி முடித்து விட்டார்கள்.
தேர்தல் ஆணையம் நேர்மையாக நடப்பதால் தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
