காப்பீட்டிற்காக இப்படியா? ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

இந்த கண்காட்சியில் ‘அன்மோல்’ என்ற எருமை மாடு ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த மாடு கருகருவென, பொலிவுடனும் இருந்தது. இந்த எருமை மாட்டின் எடையானது 1,500 கிலோவை கொண்டது. இதனின் விலை ரூ.21 கோடியாகும். இது தொடர்பாக அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், ‘இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். மன்னரைப்போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன். இதற்கு ஒருநாளைக்கு ரூ.1,500 செலவாகிறது’ என்று பெருமையாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது திடீர் மரணம் அல்ல. காப்பீட்டிற்காக அதை கொல்ல திட்டமிட்டனர்” என்று சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News