தருமபுரி தி.மு.க. எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதன்பின் அவர் பேசுகையில்,
S.I.R. என்ற பெயரில் வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் விவகாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பீகாரில் S.I.R. கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான். உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தந்திர முயற்சி மேற்கொள்கிறது.
பா.ஜ.க.வுக்கு பயந்து S.I.R. நடைமுறையை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க மறுத்து இரட்டை வேடம் போடுகிறார். பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
பீகாரில் பிரதமர் மோடி பேசிய கருத்தை, தமிழ்நாட்டில் பேச முடியுமா? தைரியம் இருக்கிறதா? வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு எதிராக பீகாரில் பிரதமர் தனது பேச்சின் மூலம் வன்மத்தை காட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
