கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதமான நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து த.வெ.க விஜய் ஆறுதல் தெரிவித்தார். இதற்கு சமூகவலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் தி.மு.க நிர்வாகியான கோயம்புத்தூரை சேர்ந்த வைஷ்ணவி என்பவர் செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டார்
அந்த வீடியோவில் கரூரில் இறந்தவர்களின் உடல்கள், சடலங்களை எடுத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சரில் தானாகவே விஜய் இருப்பிடத்திற்கு நகர்வதைப் போலவும், விஜய் போலியாக கண்ணீர் விட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் வைஷ்ணவி மீது குவிந்து வந்தனர். இந்த நிலையில், இந்த AI வீடியோ சர்ச்சைக்கு இன்ஸ்டாகிராம் பிரபலம் கார்த்திக் என்பவர் வைஷ்ணவிக்கு எதிராக பகிரங்கமாக கொலை மிரட்டலை விடுத்து உள்ளார்.
அவர் பதிவிட்டதில் “சில பெண்களைப் பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும், சில பெண்களை பார்த்தால் நன்றாக பழகத் தோன்றும், சில பெண்களைப் பார்த்தால் காதலிக்கவும், திருமணம் செய்யவும் தோன்றும், ஆனால் ஒரு சில பெண்களைப் பார்த்தால் மட்டும் தான் கண்டம், துண்டமாக வெட்டி கொலை செய்யத் தோன்றும் என்று வெளிப்படையாக பதிவு செய்து உள்ளார்.
வைஷ்ணவி தவறு செய்திருந்தாலும் சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராக இத்தகைய பகிரங்க கொலை மிரட்டல்களை விடுப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் இது ஏற்க முடியாத வன்முறை என்றும் சமூகஆர்வலர்கள் பலரும் கார்த்திக் – யை டுமையாக விமர்சித்து வருகின்றனர்.
