சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் சிவசக்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சந்திரா, இவரது கணவர் மாணிக்கம் மற்றும் மகன் ராஜேஷ் உடன் வசித்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இரவு வீட்டின் வெளிப்புறம் கதவை மூடுவதற்காக சந்திரா சென்றபோது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சந்திராவின் தலையில் வெட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று சந்திராவின் மகன் ராஜேஷ் டிவி பார்த்துக் கொண்டிருந்தார், அவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்
இதில், தாய் சந்திராவுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மகன் ராஜேஷிற்கு கை தோள்பட்டை, தலை, காது பகுதியில் பலத்த காயம் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், 20 வயது மதிக்கத்தக்க ஆறு பேர் கொண்ட கும்பல் என்றும் சந்திரா வீட்டின் அருகே ஆகாஷ் என்ற நபரை தேடி வந்த நிலையில் அவர் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்து மதுபோதையில் தாய் மற்றும் மகனையும் வீட்டை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும்,அந்த தப்பிச்சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் ராஜமங்கலம், கிரிஜா நகர பகுதியில் தமிழ்ச்செல்வன் மற்றும் மனோஜ், கிரண் ஆகியோர் தனது நண்பர்கள் 4 பேருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அப்போது, அவர்களிடமும் வாலியின் கூட்டாளி நீங்கள் தானா என்று கேட்டு மனோஜை பீர் பாட்டிலால் அடித்து இருக்கின்றனர். இதில் அருகில் இருந்த நண்பர்கள் ஓடிவிட்ட நிலையில் உடன் இருந்த தமிழ்செல்வனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய கும்பல் அமாவாசை, விக்கி, சின்ன கருப்பு, பெரிய கருப்பு மற்றும் ஜீவா என்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் யாரை கொலை செய்ய வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆறு பேர் கொண்ட கும்பல் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது
ஆறு பேர் கொண்ட கும்பல் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது
