ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 7 பேர் பலி, 150 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் நள்ளிரவு 1.59 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் காயமடைந்தகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related News

Latest News