சென்னை கோயம்பேடு அடுத்த ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (24). இவர் அதே பகுதியில் நீண்ட வருடங்களாக அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். நீண்ட நிலையில் திடீரென தனது கைவசம் இருந்த அடகு நகைகள் 41 சவரனை எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகினார்.
இது தொடர்பாக ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் கோயம்பேடு கே 10 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சில நாட்களுக்கு முன்னால் தான் அடகு வைத்த 46 கிராம் தங்க நகைகளுடன் சுனில் தலைமுறை வாங்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் தலைமறைவாக இருந்த சுனிலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
