இந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். மேலும் 85% குடும்பங்களில் ஒருவராவது ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாக உள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம், குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது உடல் மற்றும் மனதை பாதிக்கிறது.
இந்நிலையில் 3 நாள்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் என்னாகும் என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஹைடெல்பெர்க் மற்றும் கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 18 முதல் 30 வயதுள்ள 25 இளைஞர்களை 72 மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்கச் சொன்னனர். அவசியமில்லாத தொடர்புகளுக்கு மட்டும் ஸ்மார்ட்போன் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில், மூளை செயல்பாடு மற்றும் நரம்பியல் முறைகள் மதிப்பிடப்பட்டன.
ஆய்வில், மூளை ஸ்கேன்களில் டோபமைன் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மேம்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது மனநிலை, தூக்க பிரச்சனைகள் போன்றவை மேம்படுவதாகும்.
மேலும், மன அழுத்தம், பயம், பதற்றம் குறையும். நினைவுத்திறன் மேம்படும். கவனம் சிதறல் குறையும். நல்ல தூக்கம் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு டிஜிட்டல் சாதனங்கள் நமது மூளை மற்றும் நரம்பியல் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்குமென தெளிவாக வெளிச்சம் போடுகிறது.
