Saturday, December 27, 2025

ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. இன்று திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related News

Latest News