சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது :
அ.தி.மு.க.வை அழிக்கும் வியூகத்தோடு பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். பசும்பொன்னில் நடந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியவர் செங்கோட்டையன். அதனால்தான் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களால் செங்கோட்டையன் பூஜ்ஜியம் ஆக்கப்படுவார்.
தி.மு.க.வின் அஜண்டாவை செயல்படுத்த அவர்களின் B டீமாக செயல்படுபவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
