Saturday, December 27, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

அக்டோபர் 14 முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். குறிப்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News