மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும 63வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
