Thursday, December 25, 2025

பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாளாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மின்சார ரயிலை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். கட்டணம் சிறிது அதிகமாக இருந்தாலும், குறைந்த பயண நேரம் காரணமாக மெட்ரோ ரயிலை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

பயணிகள் வசதிக்காக தினமும் காலை 4:30 முதல் இரவு 11:00 வரை மெட்ரோ சேவை செயல்படுகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தகைய பாதுகாப்பு முயற்சிகளின் கீழ், மெட்ரோ ரெயில் கதவுகளில் சுடிதார் துப்பட்டா, சேலைகள், பெல்ட்கள் போன்றவை சிக்கி பயணிகள் பாதிக்கப்படுவதைக் குறைக்க புதிய ‘ஆண்டி டிராக் ப்யூச்சர் (Anti Drag Passenger Door Safety System)’ என்ற தொழில்நுட்பத்தை 52 மெட்ரோ ரெயில்களில் நிறுவ ரூ. 48.33 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய அமைப்பில், கதவுகள் சுமார் 0.3 மி.மீ அளவில் சிக்கல் உணர முடியும். இதன் மூலம் சிக்கல் ஏற்படும் போது மெட்ரோ தானாகவே அவசரகால பிரேக்கை இயக்கி ரெயிலினை உடனடியாக நிறுத்தும். இதனுடன், ஓட்டுநருக்கு உடனடி தகவல் செல்லும் என்பதால் அவசர நடவடிக்கை எடுக்க இயலும். இதன் மூலம் அனைத்து பயணிகளுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு கிடைக்கும்.

Related News

Latest News