பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (30.10.2025) பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு
சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கோம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
