மோந்தா புயல் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பேருந்துகளில் முகப்பு விளக்கு சரியாக ஒளிர்கிறதா? சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா? என கண்காணிக்க வேண்டும். பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா? என சரிபார்க்க வேண்டும்.
பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்தோடு இயக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகளே இயக்க சொன்னாலும், மாற்று வழிகளையே டிரைவர்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
