Saturday, December 27, 2025

சென்னையில் சரவணபவன் ஹோட்டலுக்கு திடீர் சீல்!

சென்னை ஆலந்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த சரவணபவன் ஹோட்டலுக்கு சீல் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும், சிலர் அரசு நிலங்களை காலி செய்யாமலும், குத்தகை மற்றும் வாடகை தொகையைச் செலுத்தாமலும் வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார்கள். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலே பல்வேறு வணிக நிறுவனங்களை இடித்து, அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை ஆலந்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த சரவணபவன் ஹோட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டடத்திற்கு சீல் வைத்தனர். அதாவது அரசுக்கு சொந்தமான 15 கிரவுண்டு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News