Saturday, December 27, 2025

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை தொடரும்

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திரக் கடற்கரையை நெருங்கி வருகின்றது. இதனால், ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News