வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையில் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னை – விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரா உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
