Saturday, December 27, 2025

மோந்தா புயல் : முக்கிய ரயில்வே சேவைகள் ரத்து..!

மோந்தா புயல் ஆந்திரா வழியாக கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மோன்தா புயல் காரணமாக சென்னை விசாகப்பட்டினம் இடையே ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட முக்கிய ரயில்வே சேவைகள்

ரயில் எண் 22869: விசாகப்பட்டினம் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (விசாகப்பட்டினம் → டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்) – அக்டோபர் 27, 2025 அன்று 7:00 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்ட சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 22870: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் (டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் → விசாகப்பட்டினம்) – அக்டோபர் 28, 2025 அன்று காலை 10:00 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்ட சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 18515: விசாகப்பட்டினம்–கிரண்டுல் எக்ஸ்பிரஸ் — 27 அக்டோபர் 2025 அன்று ரத்து செய்யப்பட்டது.

ரயில் எண் 18516: கிரண்டுல்–விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் — 28 அக்டோபர் 2025 அன்று ரத்து செய்யப்பட்டது.

ரயில் எண் 22869: விசாகப்பட்டினம்–டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் — 27 அக்டோபர்.

ரயில் எண் 22870: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்–விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் — 28 அக்டோபர்.

ரயில் எண் 12727: விசாகப்பட்டினம்–ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் — 27 அக்டோபர்.

ரயில் எண் 20805: விசாகப்பட்டினம்–புது தில்லி ஏபி சூப்பர்ஃபாஸ்ட் — 27 அக்டோபர்.

இந்த ரயில்கள் உள்பட மொத்தம் 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related News

Latest News