அமெரிக்கா விசா கெடுபிடி எதிரொலி! இந்திய மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு! மொத்த Scene-உம் தலைகீழான பகீர்!

வெளிநாட்டில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்களின் விருப்பங்களில் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சமீபத்திய தரவுகளின் படி, அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக விசா பிரச்சினைகள் மற்றும் கட்டண உயர்வு குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்காவை தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்கள் 54 சதவீதம் இருந்த நிலையில், தற்போது அது 20 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதேபோல், கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையும் 11 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாக கடுமையாகக் குறைந்துள்ளது.

இதற்கேற்ப, ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜெர்மனியில் படிக்க விரும்பும் மாணவர்கள் 2023இல் 4 சதவீதமாக இருந்த நிலையில், 2025இல் அது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் இந்திய மாணவர்களின் புதிய கல்வி இலக்குகளாக மாறியுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவழிக்கும் மொத்த தொகையும் சரிவு கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டுக் கல்விக்காக செலவிட்ட தொகை 2,880 கோடியாக இருந்தது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் காணாத குறைந்த அளவாகும்.

மொத்தத்தில், விசா சிக்கல்கள், கட்டண உயர்வுகள், மற்றும் ஐரோப்பிய கல்வியின் கவர்ச்சி ஆகியவை இணைந்து, இந்திய மாணவர்களின் கல்வி இலக்கை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு திருப்பி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related News

Latest News