புதுச்சேரி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி தமிழகப்பகுதியான வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்தியசீலன் மகன் சாரதி, 20 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மொபைல் போனில் பேசி பழங்கி வந்துள்ளனர். அப்போது, சாரதி, அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி வெளியில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை பெற்றோர்கள் புதுச்சேரி ராஜிவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, சாரதி தன்னை வெளியில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்தார். நடந்த சம்பவம் கோட்டக்குப்பம் போலீஸ் உட்கோட்டம் என்பதால், சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சாரதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
