சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி போஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் அடையாளம் தெரியாத நபர்கள் வேனில் கொண்டு வந்த 1250 கிலோ எடையுள்ள 25 ரேஷன் அரிசி மூட்டைகளை வீசி சென்றனர்.
தகவலறிந்த சிவகாசி வட்ட வழங்கள் அதிகாரி கோதண்டராமன் நடத்திய விசாரணையில், சிவகாசி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி கடத்திச் செல்ல முயன்ற கும்பல் அதிகாரிகளுக்கு பயந்து தெருவில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
