சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், விடுதலைப்போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக் கவசத்தை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் பேசியது பாராட்டுக்குரியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
