கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (வயது26). இவருக்கு ‘டேட்டிங்’ செயலி மூலமாக மலப்புரம் வண்டூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அறிமுகமானார்.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக ‘டேட்டிங்’ செயலி மூலமாக பேசி பழகி வந்தனர். இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
இதை நம்பிய அந்த பெண் அங்குள்ள லாட்ஜூக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வாலிபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அப்பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அனந்தகிருஷ்ணன் மீது போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த் சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
