Saturday, December 27, 2025

முதியவரிடம் ஆசை வார்த்தை கூறி நகைகளை திருடிய பெண் கைது

அரியலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவரை ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தை சேர்ந்த கலையரசி என்ற பெண் ஆசை வார்த்தை கூறி அவரை மது குடிக்க வைத்துள்ளார். பிறகு தனது கூட்டாளியான நவீன்குமார் என்பவரை வரவழைத்து முதியவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த முதியவர் தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் முதியவரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நகைகளை திருடிய பாஞ்சாலை (எ) கலையரசி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News