Saturday, December 27, 2025

சென்னையை வெளுத்து வாங்கும் கனமழை!!

‘மோன்தா’ புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

Related News

Latest News