சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்நிலையில், பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
