லேப்டாப் பயனர்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனை பேட்டரி விரைவில் காலியாவதுதான்.பலர் இதற்குக் காரணம் லேப்டாப் நிறுவனத்தின் தரம் என நினைப்பார்கள், ஆனால் உண்மையில் பேட்டரியின் ஆயுள் குறைவதற்கு நாம் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம். சில சிறிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பேட்டரி ஆயுளை நீடிக்க முடியும்.
லேப்டாப் பேட்டரி ஆயுளை நீட்டிக்க வேண்டிய வழிகள்
பேட்டரி 20% க்கும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதேப்போல் 80-90% சார்ஜிங் ஏறியதும் சார்ஜரைத் துண்டிக்கவும்.
பேட்டரி சேவர் அல்லது பவர் சேவர் முறையைச் செயல்படுத்தி பேட்டரி சுமையை குறைக்கவும். பவர் செட்டிங்ஸ் சரியாக அமைக்கவும்.
லேப்டாப் உற்பத்தியாளரின் தரமான சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும். பிற சார்ஜர்கள் பயன்படுத்தினால் தவறான மின்னழுத்தம் கொண்டு பேட்டரிக்கு சேதம் ஏற்படலாம்.
தேவையில்லாத செயலிகள் பேட்டரி வேகமாக காலியாகும். எனவே டாஸ்க் மேனேஜர் மூலம் அவற்றை முடக்கவும்.
அதிகமான Brightness பேட்டரி விரைவாக கழிக்கும். தேவையான அளவுக்கு மட்டும் Brightness ஐ குறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வைஃபை, புளூடூத் பயன்படுத்தாத போது அணைக்கவும். பேட்டரி 0% ஆகும் வரை பயன்படுத்தாமல் 20% முதல் 30% வரை வந்தவுடன் சார்ஜ் செய்யவும். ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தவும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் உங்கள் லேப்டாப்பின் பேட்டரி ஆயுள் நீண்ட நாள்கள் நீடிக்கும்.
