கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து தனியார் அரங்கில் வைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், விஜய் மீண்டும் களப்பணிக்கு திரும்ப உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
