Sunday, December 28, 2025

தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்., அடுத்து நடந்த பரிதாபம்

ஒடிசா மாநிலம் புரி மாவட்டம் மங்கலகட் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விஷ்வஜித் ஷா. இந்த சிறுவன் தண்டவாளத்தில் நின்றவாறு தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளான். அப்போது தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனித்த சிறுவன் அதன் அருகே நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளான்.

அப்போது வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியது. இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News