சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு வருகை தருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். திமுகவுடன் இணைந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதிராக போராடுவோம் என்றும் கருணாஸ் கூறினார். விஜய் மக்களை சந்திக்காமல் அரசியல் செய்கிறார் என்று குற்றம்சாட்டிய அவர், இ.பி.எஸ். சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார் என்று கூறினார்.
