அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ், இந்தியாவின் பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இரானி நடித்து வரும் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2’ என்ற தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
