மும்பை ஜோகேஷ்வரி மேற்கு பகுதியில் உள்ள வணிக மையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது.
