Saturday, December 27, 2025

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி (74), மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.

2001, 2006 ஆம் ஆண்டுகளில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News