இந்திய விண்வெளித்துறையின் மூத்த விஞ்ஞானி ஏக்நாத் வசந்த் சிட்னிஸ் (வயது 100). இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் ஸ்பேஸ் அப்லிகேஷன் சென்டர் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் உடன் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.விண்வெளித்துறையில் முக்கிய பங்காற்றியதற்காக ஏக்நாத் வசந்திற்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.
இந்நிலையில், வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏக்நாத் வசந்தின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
