கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கரூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழுத காட்சி இணயத்தில் வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் பலரும் இதனை கிண்டல் செய்தனர்.
இது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில் : “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும்,. இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார்.
முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக்க தெரியாமல் மறந்து விட்டான்” என கூறினார்.
