குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநில தலைநகா் திருவனந்தபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். இன்று காலை சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, ஹெலிபேடின் கான்கிரீட்டில் ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்த தீயணைப்பு வீரர்களும், காவலர்களும் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளி மீட்டனர்.
இரவோடு இரவாக பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் கான்கிரீட் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் முழுமையாக காயாமல் இருந்துள்ளது. இதன்காரணமாக குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சக்கரம் கான்கிரீட்டில் சிக்கியுள்ளது.
