Sunday, December 28, 2025

நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி., மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளதால் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றுக்குள் யாரும் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று உரு​வானது. அது நேற்றே ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாக வலுப்​பெற்று மேற்​கு – வடமேற்கு திசை​யில் நகர்ந்தது.

இன்று தென்​மேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில், வடதமிழக – புதுவை – தெற்கு ஆந்​திர கடலாரப் பகு​தி​களுக்கு அப்​பால் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக் கூடும். அடுத்த 24 மணி நேரத்​தில் மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்து மேலும் வலு​வடையக் கூடும்.

இன்று விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, கடலூர், மயி​லாடு​துறை மாவட்​டங்​கள் மற்​றும் புது​வை​யில் சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதி கனமழை​யும், சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, திரு​வண்​ணாமலை, கள்ளக்குறிச்​சி, அரியலூர், பெரம்​பலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், திருச்​சி, வேலூர், திருப்​பத்​தூர், தரு​மபுரி மற்​றும் புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில்​ கனமழை​யும்​ பெய்​ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Related News

Latest News