Sunday, December 28, 2025

ரயிலில் இடம் பிடிப்பதற்காக வதந்தி பரப்பிய சகோதரர்கள் கைது

ரயிலில் இடம் பிடிப்பதற்காக போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தீபக் சவுகான் மற்றும் அவரது சகோதரர் அங்கித் ஆகியோர் சமீபத்தில் டெல்லியில் அமிர்தசரஸ் மற்றும் கதிஹார் இடையே ஓடும் அம்ரபாலி எக்ஸ்பிரஸில் ஏறினர். ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் ஏறிய அவர்களுக்கு உட்கார சீட் கிடைக்காததால் இருவரும் சக பயணிகளுடன் சண்டையிட்டனர்.

இதனையடுத்து, தீபக் மற்றும் அங்கித் இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரித்தனர். தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக ரயில்வே போலீசார், ரயிலை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், ரயில் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து சகோதரர்கள் தீபக் மற்றும் அங்கித் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News