கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரேவந்த்குமார் (30). இவருக்கும், மல்லிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் புதுமண தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் சமீப காலமாக ரேவந்த்குமாருக்கும், அவரது மனைவி மல்லிகாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேவந்த்குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் ரேவந்த்குமார் உடலை மீட்டு விசாரித்தனர்.
தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோவில் பேசி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் திருமணத்திற்கு பின்பு தனது மனைவி மல்லிகா மிகுந்த தொல்லை கொடுக்கிறார். எனது இந்த சாவுக்கு அவரே காரணம். என்னால் உயிர் வாழவே முடியாது. அதனால் தான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
