தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 69.13 கன அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.
வைகை அணை தற்போது நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
