அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
போனஸ் வழங்காத கோபத்தில் ஊழியர்கள் கேட்டை திறந்து விட்டனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காலை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல சென்றது. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
