தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர் பேசியதாவது : இன்றைக்கு இருக்கும் ஸ்டாலின் தி.மு.க. அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. இதைத்தான் எடப்பாடியார் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்.
தி.மு.க.வை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடியாரின் பின்னால் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் முடிவு வேறு விதமாக அமைந்து விடும்.
விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளார்கள். 54 ஆண்டுகள் மக்கள் செல்வாக்கு பெற்று 31 ஆண்டுகள் ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும் அ.தி.மு.க.வுடன் அவர் பயணம் செய்ய வேண்டும். அது தான் மக்கள் எண்ணமாக உள்ளது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வுடன் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
