நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு நேற்றைய தினம் 80 ஆக இருந்த நிலையில், 154 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 217 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
