Thursday, December 25, 2025

மெசேஜ் அனுப்ப வாட்ஸ்அப் போடும் புது ரூல்ஸ்..!

வாட்ஸ்அப் உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் பிரபல மெசேஜிங் தளமாகும். தற்போது, அதன் பயன்பாட்டை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

புதிய கட்டுப்பாட்டு முறை என்ன?

மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப்பில் அறியாத பயனர்களுக்கு (Unknown Recipients) வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனுப்பும் செய்திகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய வரம்பை (Messaging Limit) அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது.

ஒரு பயனரிடமிருந்து பதில் வரும் வரை, அந்த வணிக நிறுவனம் அல்லது தனிநபர் அனுப்பும் அனைத்து செய்திகளும் இந்த வரம்புக்குள் கணக்கிடப்படும். உதாரணமாக, நீங்கள் புதிய நபருக்கு தொடர்ச்சியாக 3 செய்திகளை அனுப்பினால், அந்த 3 செய்திகளும் வரம்புக்குள் சேரும். வரம்பை தாண்டுமாறு செய்தி அனுப்ப முயன்றால், சாதனத்தில் எச்சரிக்கை செய்தி தோன்றும். அதன் பிறகு மற்ற செய்திகள் அனுப்ப முடியாது.

யார் பாதிக்கப்படுவார்கள்?

பெரும்பாலான சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். அதிகமாக ஸ்பேம் செய்திகளை அனுப்பும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களே பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வாட்ஸ்அப்பின் ஸ்பேம் எதிர்ப்பு நடவடிக்கைகள்

வாட்ஸ்அப் ஸ்பேம் செய்திகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக பல்வேறு வரம்புகளை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும், வணிகங்களும் தனிநபர்களும் ஒரே நேரத்தில் அனுப்பும் ஒளிபரப்பு (Broadcast) செய்திகளின் எண்ணிக்கையை குறைப்பதாக மெட்டா அறிவித்தது.

Related News

Latest News