அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், தி.மு.க, என்.டி.ஏ, விஜய் கூட்டணி, சீமான் என 4 முனை போட்டி இருக்கும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப விஜயை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால், தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் விஜய் அவருக்கு கூட்டணி அழைப்பு விடுத்து வருகிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது என்று கூறினார்.
