கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டில் தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
